மூளையில் உள்ள ரத்த கட்டியை அகற்றுவதற்காக கடந்த 10 ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், பிரணாப்புக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் அவர் கோமா நிலைக்கு சென்றார். தொடர்ந்து செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் அவர் இருந்து வந்தார். ஆனால், பிரணாப்பின் உடல் நிலை மேலும் மோசமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.