அரசியல்

கூட்டுறவு சங்க தேர்தல்களை தள்ளிவையுங்கள் - ஸ்டாலின்

வரும் 16-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தேர்தல்களை தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டு, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ஒருதலைபட்சமாக கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். அ.தி.மு.க வினரின் முறைகேடுகளுக்கு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் துணை போயிருப்பது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய களங்கம் என்றும், இந்த மிக மோசமான ஜனநாயக படுகொலையை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.எனவே, முறைகேடுகளுக்கு வித்திட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் முடியும் வரை, வரும் 16-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்களை தள்ளிவைக்க வேண்டும் என கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தை, ஸ்டாலின கேட்டுக்கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்