அரசியல்

அறிமுகம் கூட்டத்தை தடுத்து நிறுத்திய போலீஸ் - மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அதிருப்தி

திண்டுக்கல்லில் நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
திண்டுக்கல்லில் நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளராக மருத்துவர் சுதாகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை அறிமுகம் செய்யும்விழா, தாடிக்கொம்பு சாலையில் நடைபெற இருந்த‌து. இதற்காக அக்கட்சியின் தொண்டர்கள் பந்தல் போடுதல், கொடி நட்டுதல் என முன்னேற்பாடுகள் செய்துவந்த நிலையில், திடீரென அங்கு வந்த போலீசார், கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெறாத‌தை சுட்டிக்காட்டி முன்னேற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிய பரபரப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்