அரசியல்

தமிழகத்தில் புதிதாக 11 நகரங்களில் வரப்போகும் மிக பெரிய திட்டம் - வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

தமிழகத்தில் 11 நகரங்களில் 33 தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளுக்கான ஏலத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், தனியார் பண்பலை வானொலி 3ம் கட்ட ஏலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. 784 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் 234 நகரங்களில் 730 அலைவரிசைகளுக்கான 3-வது தொகுதி மின்னணு ஏலத்தை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், காரைக்குடி, குன்னூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, நெய்வேலி, புதுக்கோட்டை, ராஜபாளையம், தஞ்சாவூர், திருவண்ணமலை, வாணியம்பாடி நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் புதிய வேலை வாய்ப்பு உருவாகும், உள்ளூர் பேச்சு மொழி, கலாச்சாரம் ஊக்குவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி