அரசியல்

"சொத்து அட்டை மூலம் கடன் பெறும் நடைமுறை எளிதாகும்" - பிரதமர் மோடி உரை

ஸ்வமித்கா திட்டத்தில் இணைந்துள்ள கிராம மக்களின் சொத்துக்களை யாரும் பறித்திட இயலாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஸ்வமித்கா திட்டத்தை காணொலி மூலம் துவக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த திட்டம் கிராம மக்களுக்கு கடன் பெற உதவும் என்றார். கிராமமக்களிடம், நிலம் மற்றும் சொத்துக்கள் குறித்த சரியான ஆவணங்கள் இருந்தால், எந்தவொரு வங்கியும் அவர்களுக்கு கடன்களை வழங்க மறுக்க முடியாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே சொத்தின் ஆவணங்கள் உள்ளதாகவும், இனி கிராமப்புற இந்திய மக்களிடமும் அவை இருக்கும் என்றார். இன்று சுமார் ஒரு லட்சம் பேருக்கு தங்களது வீடுகளுக்கான உரிமை கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டம் நாட்டில் உள்ள கிராமங்களில் வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்