அரசியல்

திமுக MP TRபாலு-வுக்கு பிரதமர் ஆபீஸ்-ல் இருந்து பறந்து வந்த கடிதம்...

தந்தி டிவி

புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, 3 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுதாக, திமுக எம்பி டி.ஆர்.பாலுவிற்கு,பிரதமர் அலுவலகம் பதில் கடிதம் எழுதியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவிடுமாறு கடந்த மார்ச் மாதம் டி.ஆர்.பாலு, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள பிரதமர் அலுவலகம், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, முருகேசன் என்பவரது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது பயனாளர் சிகிச்சை பெறும் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்திற்கு வழங்கப்படும் என்றும், சிகிச்சை நிறைவுற்ற பின்னர், உரிய ஆவணங்களின் நகலைப் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்