அரசியல்

நெருங்கும் தேர்தல்.. அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி

தந்தி டிவி

பிரதமர் மோடி அயோத்திக்கு செல்லும் நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது...நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி இன்று உத்திர பிரதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் செல்லும் மோடி, சாலை பேரணியிலும் பங்கேற்கிறார். பிற்பகல் 2.45 மணிக்கு எட்டாவாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 4.45 மணிக்கு தௌராஹராவில் வாகன பேரணியிலும் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாலை 7 மணிக்கு அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் தரிசனம் செய்யும் பிரதமர் தொடர்ந்து அங்கு மெகா வாகன பேரணியில் பங்கேற்கிறார்... அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதற்கு பின்பு முதல்முறையாக பிரதமர் மோடி அங்கு வருகை தர உள்ளதால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்... பிரதமரின் வருகையை ஒட்டி உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்