அரசியல்

"ஸ்ரீஹரிகோட்டாவில் 10,000 இருக்கை கொண்ட அரங்கு" - வானொலி உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

அறிவியல், தொழில் நுட்பத்தில் இளைஞர்கள்அதிக ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இன்று அவர் ஆற்றிய வானொலி உரையில், ஒளவையாரின் 'கற்றது கை அளவு, கல்லாதது உலக அளவு' என்ற வரிகளை சுட்டிக்காட்டினார். அறிவியல் தொழில் நுட்பம் குறித்து இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் பேசி வருவதாகவும், சந்திராயன் -2 ஏவப்பட்ட நிகழ்ச்சியை பார்க்க இஸ்ரோ சென்ற போது, அவர்களின் உற்சாகத்தை காண முடிந்ததாகவும் தெரிவித்தார். ராக்கெட் ஏவப்படுவதை பார்க்கும் வகையில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் 10 ஆயிரம் இருக்கைள் கொண்ட அரங்கு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். 10 வயதில் படிப்பை நிறுத்திய கேரள மாநிலத்தைச் சேர்ந்த பகீரதி என்ற மூதாட்டி 105 -வயதில் மீண்டும் படிப்பை தொடர்ந்து 4-ம் நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அனைவருக்கும் உதாரணமாக திகழும் அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 32 ரக விமானம், லே மாவட்டம் ரிம்போக்கி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட போது புதிய வரலாறு படைக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி