ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ளதையொட்டி, இன்று புஷ்கர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டின் பிரதமராக இருந்தாலும், தான் பாஜகவின் தொண்டன் என்றும் அதனால் பூத் கமிட்டி கூட்டத்திற்கு அழைத்தால் கூட பங்கேற்பேன் என்றும் கூறினார். வாக்கு வங்கி அரசியலைக் கொண்ட கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தால், தங்கள் ஆதரவாளர்களுக்கு அரசு பதவி வழங்கி அதிகாரத்துவத்தை அழிப்பதாக குற்றம் சாட்டினார். ஆரோக்கியமான ஜனநாயகத்தில், வலுவான எதிர்ப்பு தேவை என்றும், ஆனால், காங்கிரஸ் எதிர்கட்சியாக தோல்வி அடைந்துவிட்டதாகவும், விமர்சித்தார்.