அரசியல்

PM Modi | "சாதி வெறுப்புகள் தூண்டப்படுகிறது" - பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

"சாதி வெறுப்புகள் தூண்டப்படுகிறது" - பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

thanthitv

"சாதி வெறுப்புகள் தூண்டப்படுகிறது" - பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு "அரசியல் நலனுக்காக மொழி, சாதி, பிராந்திய வெறுப்புகள் தூண்டப்படுகிறது" இந்தியாவில் அரசியல் லாபத்திற்காக மொழிப் பிரிவினைவாதம், சாதிப் பாகுபாடு போன்ற பிரிவினைகள் தூண்டப்படுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டினார். சிக்கிம் மாநிலத்தின் 50வது பொன்விழாவை முன்னிட்டு, காங்டாக்கில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 4000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், சிக்கிமும் வடகிழக்கும் நமது நாட்டின் முக்கியப் பகுதிகள் மட்டுமல்ல, இந்தியாவின் அஷ்டலட்சுமி எனத் பாராட்டினார். இதனால் சிக்கிம் போன்ற வடகிழக்கு எல்லை மாநிலங்களில், வேகமாக வளர்ச்சி அடைய மத்திய அரசு நேரடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். நாட்டில் அரசியல் சுயலாபத்திற்காக மொழி, சாதிய பாகுபாடு மூலம் பிரிவினை தூண்டிவிடப்படுவதாக சாடிய பிரதமர் மோடி, சிக்கிமில் இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும், ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான், சிக்கிமின் வளர்ச்சி மீண்டும் வேகம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்