அரசியல்

2 ஆண்டுகளாக கிடைக்காத உதவித்தொகை.. அமைச்சர் உதயநிதியிடம் மாற்றுத்திறனாளி மனு

தந்தி டிவி

அரியலூரில், 2 ஆண்டுகளாக உதவித்தொகை கிடைக்காத மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, உதவித்தொகை உடனடியாக கிடைக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார்.

அரியலூரில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். அப்போது, அழகிய மணவாளன் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான தவசீலன், உதவித்தொகை வழங்கக்கோரி மனு அளித்தார். அவருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில், ஆயிரத்து 735 பேருக்கு, 10 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஆய்வு செய்தார். 

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்