அரசியல்

போராட்டத்தில் குதித்த மக்கள்... திருச்சி அருகே பரபரப்பு - உள்ளே இறங்கி அமைச்சர் கொடுத்த உறுதி

போராட்டத்தில் குதித்த மக்கள்... திருச்சி அருகே பரபரப்பு - உள்ளே இறங்கி அமைச்சர் கொடுத்த உறுதி

thanthitv

போராட்டத்தில் குதித்த மக்கள்... திருச்சி அருகே பரபரப்பு - உடனே உள்ளே இறங்கி அமைச்சர் ரமேஷ் கொடுத்த உறுதி திருச்சி அடுத்த திருவானைக்காவலில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதித்தது. திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்த நீதிமன்ற உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், திருவானைக்காவல் செக்போஸ்ட் அருகே சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் காரை பொதுமக்கள் மறித்தனர். உடனடியாக காரில் இருந்து இறங்கிய அமைச்சர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அரசு உரிய ஆய்வு செய்து, மக்களுக்கு சாதகமான முறையில் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Doctor | Chennai | கத்தி கூச்சலிட்ட இளம் செவிலியர்.. மருத்துவரை தூக்கிய போலீசார்

Kaveri River | காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு

CM Vijay | TN Govt | Metro Train |கோவை, மதுரை மெட்ரோ ரயில் - தமிழக அரசு புதிய முடிவு

Amitshah | அடுத்தடுத்து மயங்கி விழுந்த காவலர்கள்..அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு

Tiger Attack | Death | கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்து கொன்ற புலி.. துடிதுடித்து இறந்த முதியவர்