அரசியல்

"பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது, காஷ்மீர் நடவடிக்கை" - ஸ்டாலின்

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே, ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கை அரங்கேறி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், அண்ணா அறிவாலய மேலாளர் பத்மநாபன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதனை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் ஏற்கனவே நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்டும், இதுவரை வெளியிடப்படவில்லை என்று தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி