அரசியல்

"கட்சிக்குள் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை" - செந்தில்குமார் எம்.பி. விமர்சனத்திற்கு பார்த்திபன் பதிலடி

தர்ம‌புரி திமுக எம்.பி. செந்தில்குமார் விமர்சனத்திற்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பதிலடி கொடுத்துள்ளார்.

தந்தி டிவி

பார்த்திபன் இயக்கத்தில் உருவான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு விருது அறிவித்திருந்த‌து. இதனை கேலி செய்யும் விதமாக தர்ம‌புரி திமுக எம்.பி. செந்தில்குமார் அண்ண‌னுக்கு பாஜகல ஒரு சீட்டு பார்சல் என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில், இரவின் நிழல் என்ற சவாலான படத்தை இயக்குவதிலே தன் கவனம் முழுவதும் உள்ளதாகவும், கட்சிக்குள் காட்சி கொடுக்கும் எண்ணம் இல்லை என்றும் பார்த்திபன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அரசியலில் மோதிப்பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன் என்று எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ள பார்த்திபன், உசுப்பேத்தாதீங்க பாஸ் என நகைச்சுவையும், கோப‌மும் கலந்து 8 டுவிட்டர் பதிவுகள் மூலம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்