அரசியல்

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் தேர்தல் : 95 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நாளை நடைபெறுகிறது.

தந்தி டிவி

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நாளை நடைபெறுகிறது. முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் கடந்த 11-ம் தேதியன்று 91 தொகுதிகளில் முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக நாளை 95 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, அசாமில் 5, பீகாரில் 5 , சத்தீஸ்கரில் 3 , காஷ்மீரில் 2 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் 14, மகாராஷ்டிராவில் 10 , மணிப்பூரில் ஒரு தொகுதி, ஒடிசாவில் 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல், உத்தரபிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 3 , புதுச்சேரியில் ஒன்று, தமிழ்நாட்டில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், என மொத்தம் 12 மாநிலங்களில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி