தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு வழங்கி வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில் மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான மாற்றம் மற்றும் புதிய நிதி ஏற்பாட்டிற்கான வட்டமேசை மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற்றது. அதை தொடக்கிவைத்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் தொழில் தொடங்கவரும் நிறுவனங்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார்.