அரசியல்

"தமிழ் இனத்துக்கும், மண்ணுக்கும் ஒவ்வாத கட்சி பா.ஜ.க" - ப.சிதம்பரம் காட்டம்

தமிழ் மண்ணுக்கும், தமிழ் இனத்துக்கும் ஒவ்வாத கட்சி பா.ஜ.க. என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

தந்தி டிவி

சிவகங்கையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்துக்கொண்டார். கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், தமிழ் மண்ணுக்கும், தமிழ் இனத்துக்கும் ஒவ்வாத கட்சி பா.ஜ.க. என்று கூறினார்.

தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றாலும், கொடுக்காத வாக்குறுதிகளை எல்லாம் பாஜக அரசு நிறைவேற்றியதாக குற்றஞ்சாட்டினார். சொல்லாததை செய்த காரணத்திற்காக இந்த தேர்தலில் பா.ஜ.க.விற்கு பாடம் புகட்டுமாறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் தெரிவித்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு