அரசியல்

ஓ.பி.எஸ். தம்பி ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம் : பன்னீர்செல்வம், பழனிசாமி அதிரடி அறிவிப்பு

அதிமுகவிலிருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ள அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

மதுரை மற்றும் தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவருக்கான தேர்தலில் துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். அதிகப்படியான வாக்குகளை பெற்ற ஒ.ராஜா முறைப்படி மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னிலையில் ஒ.ராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார், பின்னர் அவருக்கு அதிமுகவினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அதன் பின் அலுவலகம் வெளியே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராஜா, அதன்பின்பு தொண்டர்களின் உற்சாக வரவேற்பு பின்பு அங்கிருந்து விடைபெற்றார்.இந்த நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அதிரடியாக அறிவித்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்