தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா தனது அரசு வீட்டை காலி செய்ய முடிவு செய்துள்ளார். அக்டோபர் இறுதிக்குள் காலி செய்து விடுவதாக அவர் அம்மாநில அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தமது தனிப்பட்ட முடிவு இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.