அரசியல்

Tirunelveli | TVK | TN Election | நெல்லையில் தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள்

நெல்லையில் தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள்

thanthitv

Tirunelveli | TVK Vijay | TN Election | நெல்லையில் தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் #tirunelveli #tvkvijay #tvk #vijay #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha தவெக-வில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் முன்னிலையில் பாஜக, அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களை தவெக-வில் இணைத்துக் கொண்டனர். நெல்லை சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ். முருகன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நெல்லை டவுன் பகுதியில் உள்ள தவெக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் தவெக-வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தங்களை தவெக-வில் இணைத்துக் கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்தவர்களை வேட்பாளர் ஆர்.எஸ். முருகன், கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார். தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய்யின் கொள்கைகள் பிடித்திருப்பதால் தங்களை தவெக-வில் இணைத்துக் கொண்டதாக புதிதாக தவெக-வில் இணைந்த மாற்றுக் கட்சியினர் தெரிவித்தனர். நெல்லை சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் ஆர்.எஸ். முருகன் வெற்றி பெற தீவிரமாக உழைப்போம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்

Vijay | TVK | Election | ரெடியாக இருந்த விஜய்.. எதிர்பாரா திடீர் சிக்கல்.. ஷாக்கில் தவெகவினர்

TVK Vijay | TVK | TN Election 2026 | விஜய்யின் அடுத்த மூவ்

TN Assembly Election | Vote | ECI | வரும் 10ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம்

TVK Vijay Caravan | அப்படியா? - விஜய் கேரவன் குறித்து விஜய் மூலமாகவே தெரியவந்த தகவல்

BREAKING || Vijay | விஜய்யின் அடுத்த பிளான்..? அனல் பறக்க போகும் சென்னையின் ஹாட் ஸ்பாட்