Thanjavur | DMK | ``200 இல்ல 234யும் வென்று எடுப்போம்..'' | அடித்து சொன்ன திருவிடைமருதூர் தொகுதி திமுக வேட்பாளர் கோவி.செழியன் #thanjavur #DMK #Kovichezhiyan #TNElection2026 #thanthitv "முதல்வர் ஸ்டாலின் மக்கள் பேராதரவோடு மீண்டும் ஆட்சி அமைப்பார்" திருவிடைமருதூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி , சமூகநீதி விடுதி மற்றும் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் என, கல்விப் புரட்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் பேராதரவோடு மீண்டும் ஆட்சி அமைப்பார் என கோவி.செழியன் கூறியுள்ளார். தஞ்சை திருவிடைமருதூர் தொகுதி திமுக வேட்பாளர் கோவி.செழியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வில்லியவரம்பல், அய்யாவாடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் இருசக்கர வாகனப் பேரணி நடத்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார்.