அரசியல்

"சிந்தியாவுக்கு பா.ஜ.க.வில் மரியாதை கிடைக்காது" - ராகுல்காந்தி

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு பா.ஜ.க.வில் மரியாதை கிடைக்காது, அவர் திருப்தி அடைய மாட்டார் என ராகுல் காந்தி கூறினார்.

தந்தி டிவி
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார். இதுகுறித்து, ராகுல் காந்தி கருத்து கூறுகையில், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு அங்கு மரியாதை கிடைக்காது, அவர் திருப்தி அடைய மாட்டார் என்று தெரிவித்தார். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் சித்தாந்தம் தமக்குத் தெரியும் என்றும், அவர் தம்முடன் கல்லூரியில் படித்தவர் என்றும், தனது அரசியல் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டு, தனது சித்தாந்தத்தை கைவிட்டு, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் இணைந்து உள்ளார் என்றும் ராகுல்காந்தி விமர்சித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்