சென்னையில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.