அரசியல்

"18 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் காலியாகவுள்ள 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

* காலியாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளின் எம்எல்ஏக்களிடம் இருந்து, கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்காக செலவிட்ட பணத்தை வசூலித்து, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவு செய்ய உத்தரவிட கோரி ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

* அதுவரை தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிய இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

* அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல் ஏக்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* மேலும், இந்த வழக்கு இடைத்தேர்தலை நடத்த ஒருபோதும் இடையூறாக அமையாது என்றும், இதனை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிப்போட தேவையில்லை எனவும் தெரிவித்து வழக்கை ஜனவரி 4ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி