சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பின்னர், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உடன், நிதிஷ்குமாரும் அவரது கட்சியும் இணைந்து செயல்பட தயாராகி வருவதாக, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் குற்றம்சாட்டி உள்ளார். லோக் ஜனசக்தி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் போது, பா.ஜ.க. உடன் இணைந்து ஆட்சி அமைக்கும் என்றும் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். பீகாரிகளை முன்னிறுத்தும், நிதிஷ்குமார் இல்லாத அரசை அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என வாக்காளர்களை சிராக் பாஸ்வான் கேட்டுக் கொண்டுள்ளார்.