தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் என்பவர், தனது மனைவி சத்யாவை காணவில்லை என்று அளித்த புகாரில் போலீசார் விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் சத்யா கல்யாண ராணி என்பது தெரியவந்தது. மாடு மேய்ப்பவர் தொடங்கி, போலீஸ், தொழில் அதிபர் என பலரை திருமணம் செய்து பணம், நகையை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தவர் என்பதும் தெரியவந்தது. புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யாவை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். சத்யா ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். விசாரணையின் போது, காவல்துறை உரிய காலத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று கூறி சத்யாவுக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.