அரசியல்

தகிக்கும் தலைநகர் டெல்லி.. பாஜக ஓபன் சவால்

தகிக்கும் தலைநகர் டெல்லி.. பாஜக ஓபன் சவால்

thanthitv

நீட் வினாத்தாள் கசிவு குறித்து ஆழமான விவாதத்திற்கு அரசு தயார் ​வினாத்தாள் கசிவுப் பிரச்சினை மிகக் தீவிரமானது என்றும், இதில் அரசியல் ஆதாயம் தேட முயலாமல் நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சரும் மாநிலங்களவை பாஜக தலைவருமான ஜே.பி. நட்டா வலியுறுத்தியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எந்தவொரு கால அளவிலும் முழுமையான விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என ஜே.பி. நட்டா தெரிவித்தார். ​ கடந்த பத்தாண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளதாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டைப் பொறுப்பான அரசு என்ற முறையில் தீவிரமாக ஆராய்ந்து உண்மைநிலையை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்றார் மேலும், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், இமாச்சலம், கர்நாடகா, பஞ்சாப், கேரளா மற்றும் மேற்கு வங்கத்திலும் வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் சுயநலத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தைப் பயன்படுத்தாமல், நிரந்தரத் தீர்வு காண அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் அதோடு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார் ​ நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதை விட்டுவிட்டு 12 மணி நேரமோ அல்லது 18 மணி நேரமோ எத்தனை மணி நேர விவாதத்திற்கும் தயார் எனக் கூறி எதிர்க்கட்சிகளுக்குச் அவர் அறிவித்துள்ளார்

Parliament Monsoon Session | தீவிரமாகும் நீட் விவகாரம்.. 4வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

Marina | Chennai | நீட் எதிர்ப்பு போராட்டம் எதிரொலி.. மெரினாவில் குவிந்த போலீசார்

Protest ``எதிர்க்கட்சிகளும் போராட்டம்.. ஆளுங்கட்சியும் போராட்டம்’’ டெல்லியில் சற்றும் எதிர்பாரா நிலை

DMK MLA Markandeyan Case| ஐகோர்ட் கதவை தட்டிய திமுக MLA மார்கண்டேயன் - நீதிபதி அறிவிப்பு

PM Modi| CJP Protest | PM மோடியின் அறிவிப்பை நிராகரித்தது கரப்பான் பூச்சி கட்சி