அரசியல்

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை உருவாக்கியுள்ளது - ஸ்டாலின்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, தமிழக மாணவர்களுக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றத்தை அளித்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை உருவாக்கி, தமிழக மாணவர்களின் மருத்துவ கனவையும், எதிர்காலத்தையும் சிதைத்து விட்டதாக சமூக வலதளத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருவதால் குழப்பம் செய்கிறார்கள் என்று தமிழக மாணவ சமுதாயத்தின் மீது சி.பி.எஸ்.இ. குற்றம் சாட்டியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மையம் ஏற்படுத்தியது மற்றும் தமிழில் "நீட்" கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளைச் செய்த சி.பி.எஸ்.இ. தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை கேட்டு கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்