அரசியல்

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர் - நீக்க கோரி தி.மு.க உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை நீக்க கோரும் தி.மு.க-வின் மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் இறந்தவர்கள் பெயர் இடம்பெற்றிருப்பதாக மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது. குறுக்கிட்ட தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், மனுதாரரின் கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக கூறினார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக 10 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்