அரசியல்

நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல்.. பாஜக சார்பில் நெல்லையில் போட்டியிட மனு

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்னரே, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட, பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

தந்தி டிவி

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்னரே, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட, பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்சியினர் எவரும் இன்றி மகனுடன் வந்த அவர், தொகுதியின் தேர்தல் அலுவலரும், உதவி ஆட்சியருமான சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திருநெல்வேலி தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்சி இன்னும் அதிகாரபூர்வமாக வேட்பாளரை அறிவிக்காத நிலையில், நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். நல்ல நேரம் என்பதால்,இன்று மனு தாக்கல் செய்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்