அரசியல்

முத்தலாக் சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு : அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் பேச்சு

முத்தலாக் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவளிப்பதாக, அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்.

தந்தி டிவி
முத்தலாக் சட்ட மசோதா மீதான விவாதத்தில், நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், இந்த மசோதா மூலம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமைகளையும், நல் வாய்ப்புகளையும் ஈட்டித்தரும் என்றார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், கூறியுள்ள பாலின சமத்துவத்தை, இந்த முத்தலாக் சட்ட திருத்த மசோதா மேலும் வலு சேர்ப்பதாக அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் கூறினார். இந்த மசோதாவில் பெரும்பான்மை, சிறுபான்மை என பாராமல், மனிதநேயம், பெண்கள் சம உரிமையை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும் என்றார். இந்த மசோதா, இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து பெண்களுக்கும் சம உரிமை வழங்கிட ஏதுவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். சமூக சடங்குகளை பெண்கள் மீது திணிக்காமல், சம உரிமைகளை வழங்கிடும் முத்தலாக் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவளிப்பதாகவும் அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குறிப்பிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்