அரசியல்

"தன்னாட்சி அதிகாரத்தை மீண்டும் வழங்குவோம்" - எம்.பி. திருச்சி சிவா

தந்தி டிவி

டெல்லியின் நிர்வாக விவகாரங்களில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் டெல்லி தேசிய தலைநகர் பகுதி அவசர சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மசோதா மீது திமுகவின் சார்பாக பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா மசோதாவை எதிர்ப்பதாக குறிப்பிட்டார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல் என குறிப்பிட்ட அவர், மசோதா அநீதியானது மட்டும் இன்றி தேவையற்றது என குறிப்பிட்டார்.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரிய நிலையில் தற்போது இந்த மசோதாவை கொண்டு வர வேண்டிய தேவை என்ன வந்தது என கேள்வி எழுப்பினார். ஜனநாயக நடைமுறையில் ஒரு நாள் ஆளும் கட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்படும் என்றும், திமுக எம்.பி. திருச்சி சிவா சாடினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்