அரசியல்

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

தந்தி டிவி

  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி துவங்கியது. முதல் நாளில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியதால், இரு அவைகளின் அலுவல் பணிகள் பெருமளவு முடங்கியது. இதனிடையே, மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பா.ஜ.க. அரசு நேற்று வெற்றி பெற்றது. இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நடப்பு கூட்டத்தொடரில், டெல்லி அவசர சட்டத் திருத்த மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா உட்பட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்