அரசியல்

காங். இமேஜை மேடையிலேயே டேமேஜ் செய்த மோடி

தந்தி டிவி

தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பூதக்கண்ணாடி வைத்து தேடிக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...

மக்களவைத் தேர்தலையொட்டி தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் அம்மாநிலத்தின் வளர்ச்சி தடைபட்டு நின்று விட்டதாகவும், மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமெல்லாம் பாதி ரேவந்த் ரெட்டியிடமும் பாதி ராகுல் காந்தியிடமும் சென்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்ததாகவும் தற்போது மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் சாடினார்... மேலும், 3ம் கட்ட தேர்தல் நிறைவடைந்த பிறகு தற்போது காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் போட்டியிடுவதற்கான தொகுதிகளை பூதக்கண்ணாடி வைத்து தேடிக் கொண்டிருப்பதாகவும், 4ம் கட்ட தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை மைக்ரோஸ்கோப் வைத்து தான் தேட வேண்டும் எனவும் விமர்சித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்