அரசியல்

தீவிரவாதிகளுக்கு பதிலடி தர தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் - பிரதமர் மோடிகேள்வி

தீவிரவாதிகளுக்கு பதிலடி தர தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி
தீவிரவாதிகளுக்கு பதிலடி தர தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் தேர்தல் நடைபெறும் வேளையில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மோடி ஈடுபட்டு வருவதாக ஒருசாரார் கேள்வி எழுப்பி வருவதாகவும் அவர் கூறினார். ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தும் போது, அவர்களை கொல்ல தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் என்றும் மோடி கேள்வி எழுப்பினார். பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு எதிர்க்கட்சிகள் அச்சப்படுவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்