அரசியல்

"மோடி,அமித்ஷா பயன்படுத்தும் துறைகள்.. நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம்.." கடுமையாக சாடிய தெலுங்கானா முதல்வர்

தந்தி டிவி

அமித்ஷாவின் இடஒதுக்கீடு தொடர்பான வீடியோ பதிவு தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது குறித்து பேசியுள்ள முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தேர்தலில் வெற்றி பெற மோடியும், அமித் ஷாவும், இதுவரை அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகிய துறைகளை பயன்படுத்தியதாக கூறினார். தற்போது

டெல்லி போலீஸை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். யாரோ ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்கு தெலுங்கானா காங்கிரஸ் தலைவரையும், தெலுங்கானா முதல்வரையும் கைது செய்ய டெல்லி போலீஸ் வந்துள்ளதாக கூறியுள்ளார். நாங்கள் யாரும் எதற்கும் பயப்பட மாட்டோம் என்ற முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தக்க பதிலடிகொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | Petrol Diesel | TN Govt | கேன்களில் பெட்ரோல் வழங்க தடை | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன தமிழக அரசு