பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா வெளியிட்ட பதிவில் நாட்டின் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து என்று குறிப்பிட்டிருந்தார் . இதற்கு சமூகவலைதளத்தில் கடும் விமர்சனத்தை உருவாக்கியது. தேச தந்தை மகாத்மா காந்தியை இழிவுப்படுத்தும் விதமாக அம்ருதா பதிவு உள்ளதாக கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.