அரசியல்

MLA Sunil Anand | மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய MLA சுனில் ஆனந்த்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய MLA சுனில் ஆனந்த்

thanthitv

MLA Sunil Anand | மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய MLA சுனில் ஆனந்த்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், MLA சுனில் ஆனந்த் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களை அவர் பெற்றுக்கொண்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எம்எல்ஏ சுனில் ஆனந்த் கேட்டுக்கொண்டார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் சரவணகுமார் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். மருத்துவம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கினர்.

முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற நிலையில், நகர தவெக செயலாளர் காஜா, நகராட்சி மன்ற உறுப்பினர்கள் சுனில் குமார், சிவமலர், அனிதா, நகராட்சி மேலாளர் பொன்மணி, மாற்றுத்திறனாளிகள் நியமனக்குழு உறுப்பினர் ஷேக் பரீத்துல்லா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

#Mettupalayam #MLASunilAnand #TVK #thanthitv

BREAKING | புதின் கையில் தமிழ் பொக்கிஷம் - புதினுடனான சந்திப்பை தமிழில் பதிவிட்ட பிரதமர்

BREAKING | பரபரக்கும் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் - மதுராந்தகத்தில் இறங்கிய அதிகாரிகள்

Brics | ஒன்று கூடிய உலகின் பெரும் தலைகள் - தலைப்புச் செய்தியாக மாறும் குரூப் போட்டோ

Modi | Putin | ஒரே காரில் வந்திறங்கிய மோடி, புதின்... தொழில் கண்காட்சியை உன்னிப்பாக கவனித்த தலைவர்கள்

Ajith Kumar | AK | லண்டனில் இருந்து வெளியான அஜித் வீடியோ.. SMல் இதான் ட்ரெண்டிங்