MLA Kanimozhi Santhosh | பால் கொள்முதல் விலை உயர்வு - MLA கனிமொழி சந்தோஷ் வரவேற்பு
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 41 ரூபாயாக உயர்த்தபட்டுள்ளதற்கு கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.. தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதுகுறித்து எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் உற்பத்திச் செலவுகள் மற்றும் அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பால் உற்பத்தியை ஊக்குவித்து கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் இந்த விலை உயர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துச் செயல்படுவோம் என எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் உறுதியளித்துள்ளார்.