அரசியல்

நாகை எம்பி மறைவு.. ``ஈடு செய்யவே முடியாது'' - வேதனைப்பட்ட முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி

நாகை எம்பி செல்வராசு மறைவு, டெல்டா மாவட்ட மக்களுக்கும், பொதுவுடமை இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 1975-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த செல்வராசு, அரை நூற்றாண்டு காலம் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். 4 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்டா மாவட்டங்களுக்கு ரயில்வே திட்டங்கள் வேண்டியும், மக்களின் உரிமைகளுக்காவும் பல போராட்டங்களை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்