அரசியல்

முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு திடீர் கடிதம் | mkstalin | Appavu

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதிகளில், தொடர்மழை காரணமாக சேதமான நெற்பயிர்களை சபாநாயகர் அப்பாவு ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் வேளாண் பயிர்கள் மழை நீரில் மூழ்கி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். புஞ்சை குட்டிகுளம் பாசனப் பகுதிகளில், விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல்மணிகள் முளைத்து சேதமடைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, மாவட்டம் முழுவதும் சேதத்தை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, அதனை இயற்கைப் பேரிடராக கருதி முழு நிவாரணம் கிடைக்க ஆவண செய்யும்படி அந்த கடிதத்தில் அப்பாவு தெரிவித்துள்ளார்.

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி