அரசியல்

"சமூக நீதிக் கொள்கையை பறிகொடுக்கும் அதிமுக அரசு" - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சமூக நீதி கொள்கையை அதிமுக அரசு பறிகொடுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

சமூக நீதி கொள்கையை அதிமுக அரசு பறிகொடுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கடலூரின்

ராமசாமி படையாச்சியார் மணி மண்டப திறப்புவிழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, "சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம்" என குறிப்பிட்டார். இதை விமர்சனம் செய்துள்ள ஸ்டாலின், கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றை பாதுகாக்க அதிமுக அரசு முயற்சி செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். "நீட்" போன்ற தேர்வுகள் மூலம் ஏழை - ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அதை தடுக்க முடியாத அரசு என்றும் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்