தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார். அவருக்கு தலைமைச் செயலகத்திற்கு வெளியே காவல்துறையினர் வரவேற்பு மரியாதை செலுத்தினர். அதனை ஏற்றுக் கொண்டு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறைக்கு சென்ற அவர், முதலமைச்சராக தன்னுடைய பணியை தொடங்கினார். அப்போது அமைச்சர்கள், அதிகாரிகள் அவருக்கு சால்வை மற்றும் பூங்கொத்துகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், 5 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.