அரசியல்

"அடாவடியாக செயல்படும் போக்கினை திமுக அனுமதிக்காது" - திமுக தலைவர் ஸ்டாலின்

பெண்களிடம் வரம்பு மீறி நடந்து, ரவுடித்தனத்தில் ஈடுபடுவோர் மீது கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

பெரம்பலூரில், பியூட்டி பார்லர் நடத்தி வரும் சத்யா என்ற பெண்ணை, திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக இருந்த செல்வகுமார் என்பவர், குடிபோதையில் சரமாரியாக தாக்கியுள்ளார். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை காரணமாக நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பெண்ணை தாக்கிய செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தனிப்பட்ட பிரச்சினைகள், விருப்பு-வெறுப்புகள் இவற்றின் காரணமாக அடாவடியாக செயல்படும் போக்கினை தி.மு.க. அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.

பெண்களிடம் வரம்பு மீறி, ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கட்சி விதிகளின்படி கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி