அரசியல்

கலை கல்லூரி கவுன்சிலிங் எப்போ? - அமைச்சர் பொன்முடி சொன்ன அதிமுக்கிய தகவல்

தந்தி டிவி

முதுகலை கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதிகளை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்

தலைமைச் செயலகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 85 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ள நிலையில், மீதமிருக்கும் நாட்களில் 100% சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டுள்ளார். மேலும், முதல்வர் அறிவித்த திட்டத்தின் அடிப்படையில் மகளிர் சேர்க்கையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறிய அவர், காலியாக உள்ள இடங்களுக்கு இறுதியாக தேதி அறிவிக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார். முதுகலை, கலை அறிவியல் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், ஆகஸ்ட் 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும், 13ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொது பிரிவினருக்கான கலந்தாய்வும் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆகஸ்ட் 28ம் தேதி பொறியியல் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படுவதாகவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்