தமிழகத்தில் மகப்பேறின் போது ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்காக சிங்கப்பூர் அரசுடன் தமிழக அரசு விரைவில் ஒப்பந்தம் ஒன்றை செய்யவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கொப்பனாபட்டி அரசு சுகாதார நிலையத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரசவ வார்டை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
மகப்பேறு ஏற்படும் பெண்களுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளித்து அவர்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.