அரசியல்

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய அமைச்சர் : நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு சென்றபோது அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாகவும், இனிமேல் இதுபோல் நடக்காது என அமைச்சர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இனிமேல் இது போல நடக்காது என நம்புவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்