அரசியல்

TVK | Dharapuram | தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அமைச்சர் சம்பத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

TVK | Dharapuram | தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அமைச்சர் சம்பத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

thanthitv

TVK | Dharapuram | Minister Sampath kumar | Sathyabama | தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அமைச்சர் சம்பத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

#tvk #dharapuram #sampathkumar #sathyabama #thanthitv

தாராபுரம் இடைத்தேர்தல் - அமைச்சர் சம்பத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களும் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேரு நகர் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், விசில் ஊதி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே, வேட்பாளர் சத்தியபாமா பேசுகையில், சட்டப்பேரவை நடவடிக்கைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்து வருவதாகவும், தற்போது Bigg Boss பார்ப்பதைவிட சட்டப்பேரவை நேரலையை மக்கள் அதிகம் பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னை வெற்றி பெறச் செய்தால், தாராபுரம் தொகுதி இன்னும் ஆறு மாதங்களில் பூஞ்சோலையாக மாறும் என்றும் கூறினார். இந்த பிரசாரத்தில் அமைச்சர்கள் அருண்ராஜ், ஆனந்த் செங்கோட்டையன், முகமது பர்வேஸ், மதன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.வி. ராமலிங்கம், விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் ராம்குமார், பாலமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Recharge | மொபைல் ரீசார்ஜில் அதிரடி மாற்றம் - புது ரூல்ஸை இறக்கி ஹேப்பி நியூஸ் சொன்ன TRAI

EV Velu | DVAC| எ.வ.வேலு மற்றும் அவரின் மகன் மீது பாய்ந்தது FIR

veeramani | ஜெம் வீரமணி வழக்கு.. சமூக வலைதள பக்கங்களுக்கு சைபர் கிரைம் ‘வார்னிங்’

BREAKING || RTI சட்டத்தில் இருந்து விலக்கு அளித்த அரசாணை - எதிர்ப்பு எழுந்த நிலையில் ரத்து

BREAKING | உதயநிதியின் பிரசார பேச்சு.. "அவங்க வீட்டு பெண்களிடம் போட்டு காட்ட வேண்டும்"-அமைச்சர் CTR