பேரிடர் நிவாரண பணிகள் குறித்து நடிகர் கமல்ஹாசனுக்கு முழு அனுபவம் கிடையாது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கஜா புயல் நிவாரண பணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் பேசிய அவர், மூன்று மணிநேரம் ஓடும் சினிமாவை போல், நிஜத்தில் உடனடியாக அனைத்தையும் சரி செய்ய இயலாது எனக் கூறினார்.