அரசியல்

இலங்கை தமிழர் மீள்குடியேற்றம் குறித்து தமிழச்சி கேள்வி : "8,83,185 பேர், மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்" - மத்திய அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வ தகவல்

இலங்கை தமிழர்கள் மீள் குடியேற்றம் குறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கை தமிழர்கள் மீள் குடியேற்றம் குறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அவர் தமது பதிலில், இலங்கையில் இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு, இடம் பெயர்ந்த தமிழர்களில் இதுவரை 8 லட்சத்து 83 ஆயிரத்து 185 பேர், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பகுதிகளில் மீண்டும் மறு குடியேற்றம் செய்துள்ளதாக தெரிவித்தார். இன்னும், 35 ஆயிரத்து 926 தமிழர்கள், மீள்குடியேற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு துரிதமாக எடுத்து வருவதாகவும் அவர் தமது பதிலில் கூறியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"